
பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் நீண்ட கால பயணம் இது. அதன்படி அவர் 2 கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
இதன் மூலம் அவர் பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதோடு உலகளவிய தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவை விரிவாக்கம் செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு செல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2016 ஆம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, ஸ்விட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் கத்தார் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். தற்போது கானாவுக்கு செல்ல உள்ளார். இதைத்தொடர்ந்து டிரினிடாட் அண்டு டுபாகோ நாடுகளுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு நாடாளுமன்றத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் அவர் உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அர்ஜென்டினாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் பின்னர் 3 நாட்கள் பிரேசிலில் பயணம் செய்கிறார். அந்நாட்டு ஜனாதிபதி லுலா டா சில்வா அழைப்பின் பெயரில் செல்லும் பிரதமர் அந்நாட்டில் நடைபெற உள்ள 17 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.