கன்னியாகுமரி தக்கலை பகுதியில் ராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் டவர் ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென செல்போன் டவர் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து மின் கசிவு காரணமாக செல்போன் டவரில் தீ ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் வீட்டு மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.