
காசா நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில் நூற்றுக்கணக்கான மக்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. இருநாட்டினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூகவலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையேயான போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது இஸ்ரேல் காசா மீது 60 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே முழு போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.