
இந்தியாவில் தினமும் ஏராளமானோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் சேவைகளை பயன்படுத்த தற்போது வெவ்வேறு செயலிகள் உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தக்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய “ரயில் கனெக்ட்” என்ற செயலி உள்ளது. புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு யூ டி எஸ் என்ற செயலி உள்ளது.
இது தவிர தனியார் துறை செயலிகளும் உள்ளது. இதற்கிடையில் இந்திய ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெரும் வகையில் “ரயில் ஒன்” என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ரயில்வே மந்திரி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலியில் முன்பதிவு ரயில் டிக்கெட், முன்பதிவு இல்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரயில்கள் மற்றும் பி என் ஆர் என் குறித்த விசாரணை, பயணத் திட்டமிடுதல், ரயில் உதவி தேவைகள் ரயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
இதனால் ரயில்வே சேவைகளுக்கு இனி தனித்தனி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.