
பீகார் மாநில காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண் காவலர், சீருடையில் “ரீல்” வீடியோ எடுத்தது தற்போது பெரிய விவாதமாகியுள்ளது. இந்த வீடியோவில், “ஹம் ஹைன் பிஹாரி… தோடா லிமிட் மே ரஹியேகா” என்ற பிரபல வசனத்திற்கு உதட்டசைத்து பேசும் காட்சியில் அந்த பெண் காவலர் காணப்படுகிறார். அவர் அணிந்திருந்த சீருடையில் ‘ஆர்த்தி’ என்ற பெயர் தெளிவாக தெரிகிறது.
இந்த வீடியோ ஒரு போலீஸ் நிலைய வளாகத்திலேயே எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் எந்த மாவட்டத்தில் பணியாற்றுகிறார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. வீடியோ சமூக ஊடகங்களில் பரவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் “சீருடையின் மரியாதை காப்பது காவலரின் கடமை. இது களங்கமா?” என விமர்சனம் செய்துள்ளனர்.
வீடியோ வைரலானதுடன், @ChapraZila என்ற முகநூல்X பக்கத்தில், “பீகார் போலீசில் இப்படி ஆட்கள் எப்படி சேர்ந்தார்கள்? போலீசாருக்கு வேற வேலையில்லையா?” எனக் கூறி பதிவிட்டுள்ளனர். இதற்கு முன்னும் பீகார் போலீசில் வேலை பார்க்கும் சிலர், சீருடையில் டான்ஸ், பாடல் வீடியோ எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
சட்டம் மற்றும் ஒழுக்கம் காக்கவே காவல்துறை இருக்கிறது. ஆனால், பணியில் இருக்கும்போது சீருடையில் இப்படியான வீடியோ எடுப்பது துறை ஒழுக்கத்துக்கு எதிரானது என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது இந்த பெண் காவலர் ஆர்த்தி மீது பீகார் போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கியமான விஷயமாக உள்ளது.
ऐसे लोगों की बिहार पुलिस में बहाली कैसे हो जाती हैं? क्या अब पुलिस के पास कोई और काम नहीं हैं? pic.twitter.com/F3sL3VcbJr
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) June 29, 2025