
சமூக வலைதளங்களின் தற்போது ஆடுகள் நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் ஆடு மேய்ப்பவர் முன்னாடி செல்கிறார்.
பின்னாடி நடந்து வரும் ஆடுகள் நடனமாடிக்கொண்டே வருவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
These goats are called “Nachi Goats” which literally means Dancing goats. They walk as if they were dancing and are found in Pakistan pic.twitter.com/T3C8wMJ0LK
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) June 21, 2025
அந்த வீடியோவில் உள்ள ஆடுகள் உண்மையில் நடனமாடும் ஆடுகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது அந்த ஆடுகள் “நாச்சி இன ஆடுகள்” என அழைக்கப்படுகிறது.
அவை நடப்பதே நடனம் ஆடுவது போல் தோன்றும். இந்த வகையான ஆடுகள் பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் பகுதிகளில் காணப்படுகின்றன.
அவற்றின் உடலமைப்பு மிகவும் குட்டையாகவும், முடிகள் அதிகமாக முறுக்கப்பட்ட கொம்புகளுடனும் இருக்கும். அதன் நடையும் நடனம் ஆடுவது போன்று தோன்றும். பொதுவாக இந்த வகையான ஆடுகளை பகவால்பூர், முல்தான், முசாபர் மற்றும் லய்யா போன்ற மாவட்டங்களில் அதிகம் வளர்த்து வருகின்றனர்.