பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்படுவதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். ஆனால் அவர் பொருளாளர் பதவியிலேயே நீட்டிப்பார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். மேலும் நிர்வாகிகளை மாற்ற ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை.
கட்சி தலைவராகிய எனக்கே அதிகாரம் உள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதனையடுத்து தாயின் மீதே பாட்டிலை தூக்கி தாக்க முயன்றவர் அன்புமணி என ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்தவர் எனது அம்மா தான். எனது அம்மாவின் மீது சிறு துரும்பு கூட பட விட மாட்டேன் என கட்சி நிர்வாகிகளிடையே அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
