கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு 17 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி instagram மூலமாக நாமக்கலை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த 8-ஆம் தேதி சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறுமியையும் அந்த வாலிபரையும் தேடி கண்டுபிடித்தனர். இதில் சிறுமி தன் பெற்றோருடன் செல்ல மறுத்த நிலையில் ஒரு வழியாக அவர்கள் சமாதானப்படுத்தி தங்கள் மகளை தங்களுடன் அழைத்து சென்றனர்.

கடந்த 22ஆம் தேதி அவர்கள் காப்பகத்தில் இருந்து சிறுமியை வீட்டிற்கு சமாதானப்படுத்தி அழைத்து சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.