
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் உரிமைகளும் சலுகைகளும் பறிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் உரிய தகவல் கொடுக்காமல் இடை நின்றால் அவர்களது விசா ரத்து செய்யப்படும் என அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உரிய தகவல் கொடுக்காமல் மாணவர்கள் இடை நின்றால் வகுப்புகளை புறக்கணித்தால் உங்களது மாணவர் விசா ரத்து செய்யப்படும். நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்போதும் விசா கிடைக்காது. எந்த ஒரு பிரச்சனையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளை பின்பற்றி உங்கள் படிப்பை தொடருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.