பல்லாவரம் அருகே பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாசமாநல்லூரை சேர்ந்த சாமி கண்ணு(24) என்பவர் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பூமிக்கு அடியில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கடப்பாரை பட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சாமி கண்ணுவிற்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.