
பொதுவாகக் குடும்ப வன்முறை என்றால், பெண்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் சமூகத்தில் பரவலாக உள்ளது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை (United Nations) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் குடும்ப வன்முறையால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகப் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில், எகிப்து முதலிடம், இங்கிலாந்து இரண்டாம் இடம் மற்றும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல கணவர்கள், மனைவியிடமிருந்து உடல், மன, உணர்ச்சி ரீதியாக வன்முறைக்கு ஆளாகின்றனர் என்றும், அதைக் குறித்துத் திறந்தவெளியில் பேச முடியாமல் பயமும் அவமானமும் காரணமாக மௌனமாகச் சகிக்கிறார்கள் என்றும் இந்த அறிக்கை விளக்குகிறது.

ஐ.நா. நல்லெண்ண தூதராக உள்ள நடிகை எம்மா வாட்சன் கூறியதாவது, “பாலின சமத்துவம் என்பது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே அர்த்தமாகக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். குடும்ப வன்முறை என்பது எந்த ஒரு பாலினத்தின் பிரச்சனையல்ல, அனைவருக்கும் உடனடியாக உதவி, ஆதரவு தேவைப்படும் மனிதாபிமான பிரச்சனை என்பதையே இந்த அறிக்கை உலகிற்கு நினைவூட்டுகிறது.
ஆண்களும் பாதிக்கப்படலாம் என்பதைக் கட்டுக்கோப்பாக ஏற்று, சமுதாயமாக அனைவருக்கும் நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கும் முயற்சிகள் தேவை என்பதையே இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. “வன்முறைக்கு பாலினம் இல்லை” என்பதே இன்றைய உண்மை.