பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர். மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அமலாக்கத்துறை ரெய்டு காரணமாகவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லிக்கு வெள்ளை கொடியுடன் சென்றுள்ளார். மூன்று ஆண்டுகளாக ஏன் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இப்போது மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என விமர்சனம் செய்தார். இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கொடுத்தார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர்கள் ஸ்டாலின் கூறியதாவது, திமுக ஆட்சியை பற்றி சொல்வதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர் அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அவருக்கு பதில் அளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என கூறியுள்ளார்.