கர்நாடக மாநிலம் மைசூரில் மகாதேவ சுவாமி (55)-மஞ்சுளா (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது இளைய மகள் ஹர்ஷிதா (20). இதில் மகாதேவ சுவாமி, மஞ்சுளா மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் சம்பவ நாளில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் மகாதேவ சுவாமி ரியல் எஸ்டேட் முகவராக இருந்த நிலையில் இவர்கள் மூவரும் திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது.

அதாவது இவரது மூத்த மகள் ஒரு வாலிபரை காதலித்த நிலையில் பெற்றோர் காதலை ஏற்கவில்லை. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி தன் காதலனை திருமணம் செய்து கொண்டதால் மகாதேவ சுவாமி மிகுந்த வேதனையில் இருந்தார். இதனால் அவர்கள் மூவரும் ஹெப்பல் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் தற்கொலை குறிப்பை போலீசார் கைப்பற்றிய நிலையில் அதில் தங்களுடைய சாவுக்கு மூத்த மகள் தான் காரணம் என எழுதப்பட்டுள்ளது. அதோடு அவள் எங்களுடைய இறுதி சடங்கில் பங்கேற்க கூடாது எனவும் சொத்தில் பங்கு கொடுக்கக் கூடாது எனவும் எழுதப்பட்டுள்ளது. மேலும் தங்களின் அனைத்து சொத்துக்களையும் அவளின் சகோதரனுக்கு கொடுக்க வேண்டும் எனவும் எழுதப்பட்டுள்ளது.