ஒடிசாவின் புரி கடற்கரையில் சுற்றுலாவுக்காக சென்றிருந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி,  கடலில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அனுபவிக்க முயன்ற போது, அவர்கள் சவாரி செய்த வேகப்படகு கடும் அலைகளால் கவிழ்ந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

அர்பிதா கங்குலி சம்பவம் குறித்து கூறுகையில், “படகு 10 பேருக்கானதாயிருந்தும் வெறும் 3–4 பேரையே ஏற்றி விட்டனர். பெரிய அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. மீன்வலைக்காரர்கள் விரைந்து வந்ததால்தான் உயிர் தப்பினோம்” என தெரிவித்தார். மேலும் “நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். புரி கடற்கரை கடுமையான அலைகளால் பாதுகாப்பானது இல்லை. இங்கு வாட்டர் ஸ்போர்ட்ஸ் தடை செய்யப்பட வேண்டும்.

கொல்கத்தா திரும்பியதும், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் முதல்வருக்கே கடிதம் எழுதப்போறேன்” எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் இந்திய வானிலை மையம் (IMD), ஒடிசா கடற்கரை பகுதிகளில் கடும் மழை, 45 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரித்துள்ளது. மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.