
கேரள மாநிலத்தில் பிரவீனா என்ற 34 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு முதலில் சதீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் க்ரிஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் பிரவீனா தன் கணவரை பிரிந்து கிரிஷூடன் வாழ ஆரம்பித்தார். இதில் பிரவீனாவுக்கு முதல் கணவன் மூலம் அனர்கா என்ற 14 வயது மகளும், அபிநா என்ற 9 வயது மகளும் இருக்கும் நிலையில் இருவரையும் தன் கள்ளக்காதலனுடன் அழைத்து சென்றுள்ளார்.
இவர்கள் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென க்ரிஷ் மற்றும் பிரவீனா இடையே தகராறு ஏற்பட்டதால் பிரவீனா அவரை பிரிந்து செல்ல முடிவு செய்தார். இதனால் கிரிஷ் நேற்று முன்தினம் பிரவீனாவுடன் சண்டை போட்ட நிலையில் தகராறு முற்றவே கோபத்தில் அவர் பிரவீனாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதுமட்டுமின்றி பிரவீனாவின் மூத்த மகளையும் அவர் கத்தியால் குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பிரவீனாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் இளைய மகள் எங்குள்ளார் என்பது தெரியாத நிலையில் தலைமறைவான கள்ளக்காதலனையும் சிறுமியையும் போலீசார் வலை வீசி தேடினர்.
இதில் கிரிஷ் சிறுமியை வனப்பகுதிக்குள் கடத்தி சென்றது தெரிய வந்ததால் தற்போது ட்ரோன் மூலமாக போலீசார் தேடிய நிலையில் கிரிஷ் பிடிபட்டார். மேலும் அவரை கைது செய்த போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.