உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு இளைஞர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அந்த வீடியோவில், உலகின் மிக விஷம் கொண்ட பாம்பு ‘கிங் கோபரா’ அவரது அருகில் படுத்துக்கிடந்தபோதும், அந்த இளைஞர் படுக்கையில் நிம்மதியாகவும், அச்சமின்றியும் இருந்தார். ஆனால் பாம்பு அவருடைய தலைவழியாக சறுக்கியபோது, அவர் பயத்தால் சற்றே  நடுங்கியதும், வீடியோ திடீரென முடிந்துவிட்டது. இந்த வீடியோவைப் பார்த்த பலர் “அதுக்கப்புறம் என்னாச்சு?” என்று  கேட்டனர்.

இதற்குப் பதிலாக, இப்போது அந்த இளைஞர் ‘பாகம் 2’ வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதில் அவர், அதே கிங் கோபராவுடன் அருகில் நின்று படம் எடுத்துக்கொள்வது போலக் காணப்படுகிறார். இந்த வீடியோவும் இன்ஸ்டாகிராமில் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. சிலர் இதைப் பார்த்து “இதெல்லாம் ஸ்கிரிப்ட் தான்” என சந்தேகம் தெரிவித்துள்ளனர். “போர் ஆகுமா எதுக்கும் பாம்பு கூட விளையாட வேண்டி வருது” என சிலர் கலாய்த்தனர்.

அதே நேரத்தில், வனவிலங்கு நிபுணர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். “கிங் கோபரா மாதிரி விஷப்பாம்புகளுடன் இப்படிச் செய்ய வேண்டாம். இதைப் போல வீடியோவைப் பார்த்து, யாரும் பாம்புகளுடன் விளையாட முயற்சிக்க வேண்டாம். இது உயிருக்கு மிக பெரிய ஆபத்து” என அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

மேலும், சில நெட்டிசன்கள், “உத்தரகாண்ட்ல கிங் கோபரா வருமா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுவாக, இந்த வகை பாம்பு கேரளா, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களில் தான் காணப்படுகிறது. எனவே, அந்த பாம்பு செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டிருக்கலாம் என்றதும், அதனால்தான் அந்த இளைஞர் பயப்படாமல் இருந்திருக்கலாம் என்றதும் கூறப்படுகின்றது.

 

இப்போது அனைவரும் எதிர்பார்ப்பது – “பாகம் 3 வருமா?” என்பது. இது உண்மையா, காட்சிப்படுத்தல் மாதிரியான வீடியோவா என்பது தெரியவில்லை. ஆனாலும், இந்த சம்பவம் முழுக்க முழுக்க இணையத்தில் வைரலாகி, அந்த இளைஞரை ஒரு சமூக ஊடக ‘ஹீரோ’வாக மாற்றியுள்ளது!