சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பைக்கர் விபத்துக்குள்ளாகும் காணொளி வைரலாகி வருகிறது. ‘ranjeetraiderr15’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு இளைஞர் வேகமாக பைக்கை ஓட்டிக்கொண்டு ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கிறார். இந்த நேரத்தில், பின்னால் நடந்து செல்லும் நண்பர் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். சில வினாடிகளில் அந்த இளைஞர் தன்னுடைய சமநிலையை இழந்து சாலையில் கவிழ்ந்து பயங்கரமாக விழுகிறார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by RANJEET R15 (@ranjeetraiderr15)

சாலையில் வாகனம் ஓட்டும்போது மிகச் சிறிய தவறே பெரும் விலை கொடுப்பதற்கான காரணமாக மாறும் என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. வேகம்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என்பதை தொடர்ந்து அரசு எச்சரித்துவந்தாலும், இன்றைய இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பெயர் வாங்கும் ஆசையில் பாதுகாப்பை புறக்கணிக்கிறார்கள். ஸ்டண்ட் வீடியோ பதிவேற்றம் செய்வதற்காக, சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் தள்ளுகிறார்கள்  என்பது இவ்விபத்து மூலம் தெளிவாகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.