சமூக ஊடகங்களில் தற்போது ஒரு சிசிடிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மளிகைக் கடையில் கடைக்காரர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, திருடன் ஒருவர் உள்ளே வந்து பணப்பெட்டியை திறந்து அதிலிருந்து பணத்தை எடுத்து விட்டு எதுவும் நடக்காதது போலச் சாதாரணமாக வெளியே செல்கிறார்.

அதில் விசேசமானது என்னவென்றால், அந்த சமயத்தில் கடைக்காரர் விழித்துக் கொண்டும், எதுவும் செய்யாமல் முன்னே பார்த்துக்கொண்டே இருந்தார். இது குறித்து பயனர்கள், “இது ஒரு கனவா?” என கிண்டலடித்துக் வருகின்றனர்.

அந்த சிசிடிவி வீடியோ கடந்த மே 23 ஆம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது. “கடைக்காரர் தூங்கிக் கொண்டே இருந்தார்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அந்த வீடியோ தற்போது 1.24 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது.

அந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்ற தகவல் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், திருடரை விட கடைக்காரரையே நெட்டிசன்கள் அதிகமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.