
ஐபிஎல் 2025 தொடரின் 66-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் 15-வது ஓவரில், பஞ்சாப் வீரர் ஷஷாங்க் சிங் ஒரு உயரமான பந்தை லாங்-ஆன் நோக்கி அடித்தார். அங்கு இருந்த கருண் நாயர் பந்தை பிடித்து பவுண்டரிக்கு செல்லாமல் தடுக்க முயற்சி செய்தார். ஆனால், பந்தின் பாதை மற்றும் அவரது பாதம் பவுண்டரி ரேப்பைத் தொட்டதா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. 3வது அம்பையர், சரியான சாட்சியம் இல்லாத நிலையில், பந்திற்கு வெறும் ஒரு ரன் வழங்கினார். இதனால் முக்கிய நேரத்தில் பஞ்சாப் அணி 5 ரன்களை இழந்தது.
இந்த முடிவால் பஞ்சாப் அணிக்கு ஆட்டத்தில் மோசமான தாக்கம் ஏற்பட்டது. இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முடிவுக்கு பின், பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா, சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இவ்வளவு தொழில்நுட்பங்கள் உள்ளபோதும், இவ்வாறு தவறான முடிவு எடுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், கருண் நாயரிடம் நேரில் பேசியபோது, பந்து பவுண்டரியைத் தாண்டியது என அவர் உறுதியாக கூறியதாகவும் தெரிவித்தார்.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) May 24, 2025
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் 3வது அம்பையரின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளனர். IPL போன்ற உயர்மட்ட போட்டிகளில் கூட இவ்வாறு தவறுகள் நடப்பது, இந்த லீக்கின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என பலரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் BCCI இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமா ஈன்று எதிர்பார்க்கப்படுகிறது.