அமெரிக்காவின் “லேடி எல்ஜின்” என்ற நீராவி கப்பல் 1860 ஆம் ஆண்டு மிக்சிகன் மகாண ஏரியில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட புயலின் காரணமாக மற்றொரு கப்பலின் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீராவி கப்பல் ஏரியில் மூழ்கிய நிலையில், அதில் பயணித்த 300 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து அமெரிக்காவிலேயே மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்படும் நிலையில் கப்பலின் உடைந்த பாகங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கண்டெடுக்கப்படும் பொருள்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 1992 ஆம் ஆண்டு அந்தக் கப்பலிலிருந்து ஒரு கைக்கடிகாரம் கண்டெடுக்கப்பட்டது.

அதன் உரிமையாளர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹெர்பர்ட் இங்க்ராம். இந்த கைக்கடிகாரம் 1992 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட நிலையில், மிக்சிகன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 165 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கைக்கடிகாரம் உரிமையாளரான ஹெர்பர்டிடம் ஒப்படைப்பதற்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.