வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் களப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அதிமுக பாஜக கூட்டணி ஏற்கனவே உறுதியானது. இந்த நிலையில் தவாக தலைவர் வேல்முருகன் திமுகவுடன் கூட்டணி தொடர்வதாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தொடங்கி பிரஸ்மீட் வரை பொது இடங்களில் திமுக மற்றும் அரசியல் தொடர்ந்து விமர்சித்து வந்ததால் அவர் 2026 தேர்தலில் திமுக கூட்டணியை விட்டு விலகுவதாக பேச்சு அடிபட்டது. ஆனாலும் கூட்டணி தொடர்பாக பேசாமல் இருந்து வந்த நிலையில் இன்று திமுகவுடன் கூட்டணி தொடரும் என வேல்முருகன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பண்ருட்டி தொகுதியில் மீண்டும் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.