
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். விரைவில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் இவர்களது ஓய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பார்டர் கவாஸ்கர் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் விராத் மற்றும் ரோஹித் சொதப்பியதால் அவர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்வு குழு மற்றும் தலைமை பயிற்சியாளருக்கும் முடிவு எடுத்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அதற்கு முன்னதாக இருவரும் தாங்களாகவே ஓய்வை அறிவித்து விட்டனர். இது குறித்து கௌதம் கம்பீர் கூறியதாவது ஒரு வீரர் விளையாட த் தொடங்கும் போதும் சரி அதை நிறைவு செய்யும்போதும் சரி அது முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட உரிமை. இதில் வேறு யாருக்கும் உரிமை கிடையாது. பயிற்சியாளரோ தேர்வாளரோ அல்லது இந்த நாட்டில் வேறு யாருக்கும் நீங்கள் இப்போதுதான் ஓய்வு பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்த உரிமை இல்லை. இது அவர்களுக்குள் இருந்து வரும் முடிவு தான்.
ஆம் நாங்கள் 2 மூத்த வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளோம். சில நேரங்களில் இது இளம் வீரர்கள் தங்களுடைய கையை உயர்த்தி விளையாடுவதற்கான வாய்ப்பு என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பு கடினமாக இருக்கும் ஆனால் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்காக வீரர்கள் அங்கே இருப்பார்கள். இந்த கேள்வி ஏற்கனவே என்னிடம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார்.