
உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், ஒரு சாதாரணமான கோரிக்கையால் திருமணம் முறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமகன் ஓய்வெடுக்க ஒருகட்டில் கேட்டதால் கோபத்தில் மாமனார் தகராறு செய்து போலீஸ் ஸ்டேஷன் வரை அந்த பிரச்சனையை கொண்டு சென்றார்.
இந்த சம்பவம் பஜார் சுக்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைதில் மௌ கிராமத்தில் நடந்தது. இங்கு வசிக்கும் சோஹன் லால், தனது மகள் நிஷாவுக்கு, ஷாதிபூர் கிராமத்தைச் சேர்ந்த திலக் ராமுடன் திருமண ஏற்பாடு செய்திருந்தார்.இவர்களுக்கு திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் மறுநாள் காலை திலக் ராம் ஓய்வெடுக்க ஒரு கட்டில் வேண்டுமென்று கேட்டுள்ளார். அவர் கட்டிலை கேட்டதையடுத்து மாமனாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மாமனார், தனது மகளை அனுப்ப மறுத்துவிட்டார்.
இதனால் மணமகனும், அவரது குடும்பத்தினரும் பெரும் தவிப்பில் சிக்கினர். இரு குடும்பத்தினரிடையே சண்டை முற்றிய நிலையில், உறவினர்கள் தலையீடு செய்தும் பிரச்சனைத் தீரவில்லை. இறுதியில், மணமகனின் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால், மணமகளின் தந்தை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் தன்னுடைய மகளை அவருடன் அனுப்ப மறுத்தார்.
பின்னர் மணமகனும், அவரது குடும்பத்தினரும் நேரடியாக மணமகளில்லாமல் காவல் நிலையம் சென்றனர். அங்கு SHO தயாசங்கர் மிஸ்ரா தலைமையில் போலீசார் மத்தியஸ்தமாக தலையீடு செய்த பின்னரே, மணமகள் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவர் பிரச்சனையை சரி செய்து பின்னர் மணமகளை மணமகனுடன் ஒன்றாக வாழ அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.