
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை ஏர்போர்ட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் முறைக்கேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனைக்கு பயந்து தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அப்போதே கலந்து கொண்டிருந்தால் கூட தேவையான நிதியை பெற்றிருக்கலாம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மோடி வந்தால் ஸ்டாலின் கருப்பு பலூன் பறக்க விடுவார். தற்போது ஆளுங்கட்சியாக மாறிய பிறகு அவருக்கு வெள்ளை குடை பிடிக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. மக்கள் நலனில் அக்கறை இருந்தால் 3 ஆண்டுகளாக கலந்து கொள்ளாமல் இப்போது மட்டும் கலந்து கொண்டது ஏன். மேலும் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக அவர் டெல்லிக்கு சென்றார் என்று கூறினார்.