தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ரெய்டுக்கு பயந்து தான் முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக விமர்சித்திருந்தார். இதற்கு இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்பதற்காக தான் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். நாங்கள் ED -க்கும் பயப்பட மாட்டோம் மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம். எங்களை மிரட்டி பார்த்தார்கள். ஆனால் மிரட்டி அடிபணிய வைக்க திமுக ஒன்னும் அடிமை கட்சி கிடையாது.

பெரியார் கொள்கையின்படி இயங்கும் சுயமரியாதை கட்சி. தவறு செய்தவர்கள் மட்டும்தான் பயப்பட வேண்டும். எங்களுக்கு யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நாங்கள் சட்டப்படி செயல்படுவோம் என்று கூறினார்.