
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலம், ஆவரன் மாவட்டத்திலுள்ள மஷ்கே பகுதியில், நேற்று அதிகாலை பலூச் பத்திரிகையாளர் அப்துல் லத்தீப் அவரது வீட்டுக்குள் கொடூரமாகத் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல், பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் மேற்கொண்டதென பலூச் யாக்ஜெஹ்தி குழு தெரிவித்துள்ளது. அப்துல் லத்தீப்பின் மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே இந்த பயங்கர செயல் நடைபெற்றுள்ளது.
View this post on Instagram
அப்துல் லத்தீப், பலூச் மக்களுக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவகாரங்களை தைரியமாக பதிவு செய்து வந்தார். அந்த மாநிலத்தில் நிலவும் அரசியல், சமூக மீறல்களை வெளிக்கொணர்ந்ததற்காகவே இவரை கொலை செய்தாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், அவரது மகன் சைஃப் பலோச் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவர்களின் உடல்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடூரச் சம்பவத்தையடுத்து, பலூச் மனித உரிமை அமைப்புகள், சர்வதேச தலையீட்டை கோரி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை, பத்திரிகை சுதந்திர அமைப்புகள், மற்றும் உலக ஊடகங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கும் மனிதநேயத்துக்கு எதிரான செயலைக் கண்டிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.