
ராஜஸ்தான் மாநிலத்தில் பி பாசிட்டிவ் ரத்த வகை கொண்ட சைனா என்ற கர்ப்பிணிக்கு ஏ பாசிட்டிவ் வகை ரத்தத்தை ஏற்றதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கர்ப்பிணியும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சைனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்துள்ளது.
இதனால் மருத்துவமனையிலேயே சைனாவுக்கு ரத்தம் ஏற்றியுள்ளனர். அவரது ரத்த வகை பி பாசிட்டிவ். ஆனால் சைனாவுக்கு ஏ வகை ரத்தத்தை ஏற்றியதால் உடல்நல குறைவு ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சைனாவும் வயிற்றில் இருந்து அவரது குழந்தையும் உயிரிழந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் அலட்சியத்தால் தான் இரண்டு உயிர்கள் பரிபோனதாக சைனாவின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.