நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது. கட்சி ஆரம்பித்ததில் இருந்து விஜய் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். மக்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்கிறார். அந்த வகையில் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு பரிசுகளை வழங்கினார்.

இந்த முறையும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.