
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்ததும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இதனை தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தர்வு முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. இதே போன்ற பிற வகுப்புகளுக்கும் கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோடை விடுமுறை நீடிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. மே மாதத்தில் பதிவாகும் வெப்பத்தின் அளவை பொறுத்து விடுமுறையை நீடிப்பது குறித்து யோசிக்கப்படும் என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் பின்னர் ஜூன் 2-ல் கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.
இதனை தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளையும் திறப்பதற்கு தயாராக வேண்டும் என்று அறிவித்துள்ளார்.