
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓடும் பேருந்தில் ஒருவர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் பயணிகள் இருந்தனர். ஓட்டுனர் இருக்கைக்கு அருகே உள்ள வழியாக தொங்கியபடி வந்த ஒருவர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு ஓட்டுனரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பேசிக் கொண்டிருந்தபோது அந்த நபர் ஓட்டுனரின் செல்போனை பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கியதால், பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திய ஓட்டுனர் செல்போனை தருமாறு அவரை திட்டினார். இந்த காட்சிகளை பொதுமக்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.