பிரதமர் மோடியின் கிசான் போஜனா திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒரு செயலியை குறிப்பிட்டு, இந்த செயலியின் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று வாட்ஸ்அப்பில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த போலியான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட பதிவில் கூறியதாவது, பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைய pmkisan.gov.in என்ற இணையதளம் அல்லது தேசிய தகவல் மையம் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ள ‘PMKISAN Gol’ இந்த செயலியை போனில் பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம். வாட்ஸ்அப்பில் பகிரப்படும் செயலி போலியானது அதை பதிவிறக்கம் செய்பவர்களின் செல்போன் முடக்கம் செய்யப்பட்டு வங்கி கணக்கில் உள்ள பணம் மற்றும் தகவல் திருடப்படும் அபாயம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.