
பீகார் மாநிலத்தில் உள்ள அரா மாவட்டத்தில் கோயல் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது திலீப் குமார் என்ற 24 வயது வாலிபர் தன்னுடைய மைத்துனி ராணி என்பவருடன் ரகசியமாக ஒரு அறையில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த போது கிராம மக்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். பின்னர் அவர்களுக்கு ஊர் மக்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில் முதலில் திலீப் இதற்கு தயக்கம் காட்டினாலும் கடைசியில் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர். இதில் ராணிக்கு ஏற்கனவே சோனு என்ற வாலிபருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் 2 வருடங்களாக திலீப்புடன் கள்ள உறவில் இருந்துள்ளார்.
அவர் தன்னுடைய கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இது பற்றி சோனுவுக்கு சந்தேகம் எழவே அவர் இருவரும் தனிமையில் ரகசியமாக இருந்தபோது தன் மனைவியை ஊர்மக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்தார். பின்னர் சோனு திலீப் என் மனைவியுடன் வாழ விரும்பினால் எனக்கு பிரச்சினை கிடையாது என்று கூறி இருவருக்கும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.