
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் லசுடியா பகுதியில், ஒரு பெண் தனது காதலனை வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருப்பதைக் கண்டதும், அதிரடியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு கிளிஃப்டன் கார்ப்பரேட் கட்டிடத்திற்கு அருகில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட இளைஞன் தரையில் கிடந்தபோது, பெண் அவரை செருப்புகளால் அடித்து, தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பெண் காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்காக அவர் தன் காதலன் தன்னிடம், மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதுடன், அவர் அணிந்திருந்த ஆடைகளையும் கிழித்து எடுத்துச் செல்லும் காட்சிகள் வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது. அந்த இளைஞன் குடிபோதையில் இருந்ததாகவும், தாக்கியவர் அவனது மனைவியென்று அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த பெண் அங்கிருந்து சென்ற பிறகு அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு ஆடைகளை அணிய உதவி செய்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
View this post on Instagram
சம்பவத்துக்குப் பிறகு, அந்தப் பெண் இரு சிறுவர்களுடன் பைக்கில் அந்த இடத்திலிருந்து கிளம்பினார். இது தொடர்பாக லசுடியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இதுவரை இரு தரப்பினரும் போலீசில் முறையான புகார்களை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.