இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாகவும் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாப்பிள்ளை மணமகளுக்கு வாயில் ஏதோ ஊட்டுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். போட்டோவுக்கு போஸ் கொடுத்து முடிந்தது மணமகள் வாயை திறக்காமல் இருந்த நிலையில் திடீரென மணமகன் அந்த பெண்ணின் தலையை பிடித்து அந்த உணவுப் பொருளை வாய்க்குள் திணித்துவிட்டார்.

 

அவர் கட்டாயப்படுத்தி திணிக்க மணமகள் முகம் சுளித்த நிலையில் அதனை உடனடியாக துப்பிவிட்டார். அப்போது அருகில் இருந்த தோழிகள்விழுந்து விழுந்து சிரித்த நிலையில் பின்னர் அந்த பெண்ணின் முகத்தை துடைத்து விட்டனர். திருமணத்தின்போது மணமகன் இப்படி செய்தது பலரிடமும் கண்டனங்களை குவித்து வருகிறது. மேலும் என்னதான் நகைச்சுவையாக இருந்தாலும் இப்படி எல்லாம் செய்வது மிகவும் தவறு எனவும் அந்த பெண்ணின் மனம் எவ்வளவு பாதிக்கப்படும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.