ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் கில்லர் தேவேந்தர் சர்மா என்பவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவரை டாக்டர் டெத் என அழைப்பார்கள். ஆயுர்வேத மருத்துவரான இவருக்கு 67 வயது ஆகும் நிலையில் திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு இவர் தலைமறைவான நிலையில் ஒரு பாதிரியார் போல மாறுவேடம் அணிந்து ஆசிரமத்தில் இருந்தார். ஆனால் இவர் ஒரு ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவரை தற்போது ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கடந்த 1998 மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கு இடையில் சட்ட விரோதமாக பல மாநில மருத்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உதவியுடன் 125க்கும் மேற்பட்ட சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.

அதன் பிறகு கடந்த 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களை கொடூரமாக கொலை செய்தார். அதாவது பயணம் செய்யும்போது ஓட்டுநர்களை கொடூரமாக கொலை செய்து அவர்களின் சடலங்களை முதலைகளுக்கு தீனி ஆக்கினார்.

அதாவது முதலைகள் நிறைந்த ஹசரா கால்வாயில் இறந்தவர்களின் சடலங்களை வீசிவிடுவார். அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் உள்ளிட்ட 27 வழக்குகள் பதிவாகியுள்ளது.

அவருக்கு 7 வெவ்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குரு கிராம் நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனையும் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.