மும்பையில் உள்ளூர் ரயிலில் ஒரு பெண் பயணி கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பெட்டியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் பயணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த ரயிலில் கூட்டமாக இருந்த நிலையில் முன்பதிவு செய்யாத ஒருவர் அந்த பெட்டியில் ஏறி மாற்றுத்திறனாளி பெண்ணுடன் இருக்கை தொடர்பாக தகராறு செய்தார். இந்த தகராறு முற்றிய நிலையில் கோபத்தில் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அந்த ஆண் பயணி கொடூரமாக தாக்குகிறார்.

 

இதனை அங்கிருந்த சக பயணிகள் தடுக்க முயன்ற போதிலும் அந்த பெண்ணை தாக்குவதை அவர் நிறுத்தவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் பலரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.