
தெலுங்கு டிவி நடிகை அனுசுயா பரத்வாஜ் சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்கு குடிப்பெயர்ந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தப்பட்டது. யாக குண்டத்திலிருந்து எரிந்த தீயில் அனுமன் உருவம் தோன்றியது. இதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகை, அந்த படத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் ஜெய் ஹனுமான் என்று நினைக்காமல் நான் எதையும் செய்வதில்லை. நான் அனுமானை என் தந்தையாக நினைக்கிறேன் என்பது என் அன்புக்குரிய அனைவருக்கும் தெரியும்.
நாம் எந்த கடவுளிடம் சத்தமாக ஏதாவது சொல்ல விரும்பினால் அதை ஒரு ஹோமம் மூலம் சொல்கிறோம். அனுமன் ஜி எங்கள் குடும்ப பெயரையும் எங்கள் வீட்டையும் எங்களையும் ஆசீர்வதிக்க வந்தார். எல்லோரும் ஆன்மீகவாதிகள் அல்ல என்பது எனக்கு தெரியும் ஆனால் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகை அவருடைய வீட்டிற்கு சஞ்சீவினி இல்லம் என்று பெயரிட்டுள்ளார்.