
அரியானா மாநிலம் அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக அலிகான் முகமது மக்முதா பாத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இந்தியா ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அவரது கருத்தை இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி காவல் துறையினர் நேற்று அவரை டெல்லியில் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா பேராசிரியர் அலிகான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் கபில்சிபல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நாளை அல்லது புதன்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தலைமை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.