அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்து காப்பீட்டை கட்டணமின்றி பெற அரசு பல வழிகளை செய்து வருகிறது. அதன்படி இந்த சலுகைகள் குறித்து பல முன்னோடி வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு பலனாக பல சலுகைகளை வங்கி தர முன்வந்துள்ளது.

மேலும் இது குறித்து நிதி அமைச்சர் தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீடு தொகை ரூ.1 கோடி நிதியினை வழங்க வேண்டும்.

விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டிய மகளின் திருமணச் செலவுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 2 மகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவியும், இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தில் உள்ள மகளின் உயர்கல்விக்கான உதவித்தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரச அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பார்க்காமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் வங்கி வழங்கிடும் என்று தெரிவித்தார்.

இந்த சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடப்பட்டன.

இதில் நிதி அமைச்சர், தலைமை அமைச்ச, நிதித்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை செயலாளர், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனர் போன்ற பலர் கலந்து கொண்டனர்.