
பாரம்பரிய உடையான லெஹங்காவை அணிந்து பாரிஸ் மெட்ரோவில் பயணித்த இந்திய பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் கலந்த அழகிய அமைப்பில் ரீலாக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வீடியோ, பார்வையாளர்களை கவர்ந்தது.
இந்த வீடியோவில், எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹங்காவை அணிந்த நிவ்யா, மெட்ரோ ரயிலில் அமர்ந்திருக்கும் காட்சியில், பெரிய சன்கிளாஸ் மற்றும் ஸ்டைலான தோற்றத்துடன் கேமராவை நோக்கி மென்மையாக புன்னகைக்கிறார்.
View this post on Instagram
இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் பாரம்பரிய இந்திய உடையில் வெளிநாட்டில், குறிப்பாக பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது அரிதாகும் போது, நிவ்யாவின் இந்த செயலால் பாரம்பரியக் கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தியிருப்பது பெருமை அளிக்கிறது.
நிவ்யா இதைப் பகிர்ந்து, “மெட்ரோவில் லெஹங்கா? ஏனெனில் இன்று பாரிஸுக்கு கொஞ்சம் மசாலா தேவை! பொதுப் போக்குவரத்தில் லெஹங்கா அணிவீர்களா?” என கேள்வியுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது 1 மில்லியன் பார்வைகளைத் தாண்டி இணையத்தை கலக்கி வருகிறது. ஒருபக்கம் பாரம்பரியத்தையும், மற்றொரு பக்கம் நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் வெளிநாட்டு பார்வையில் இந்திய அழகை பிரதிநிதித்துவப்படுத்திய நிவ்யாவை பாராட்டும் கமெண்டுகள் திரளாக வருகின்றன.
கலாச்சார அடையாளங்களை பெருமையுடன் வெளிக்கொணர்ந்த இந்த சம்பவம், உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களின் தனித்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.