
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மாணவியை ஆசிரியை ஒருவரது கணவர் கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு 11ஆம் வகுப்பு மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவி ஆசிரியை ஒருவரது வீட்டில் டியூஷன் படித்து வந்தார். இந்நிலையில் அந்த டீச்சர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவருடைய கணவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதாவது ஆரோக்கியதாஸ் (45) அடிக்கடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.
இதைக் கேட்டு மாணவியும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி மாணவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கூறினார்.
இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய தாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.