
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.