தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் “வாடிவாசல்” என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில், தற்போது படத்தின் இசை பணிகள் துவங்கி இருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்தப் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இயக்குனர் வெற்றிமாறன், சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, “நான் இயக்கும் திரைப்படங்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பிற்கு நான் பொறுப்பு கிடையாது. என்னுடைய திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தால் நான் சந்தோஷப்படுவேன். என் படத்தை நான் முழு மனதுடன் தான் இயக்கி கொண்டிருக்கிறேன். என்னால் அதை மட்டும் தான் மக்களுக்கு தர முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலும் வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு தொடர்பான கதை என்றும், இதற்காக ஒரு மாடு வாங்கப்பட்டு உள்ளதாகவும், நடிகர் சூர்யா சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறினார்.