இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் (Circle Based Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,600 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சென்னை மண்டலத்திற்கு மட்டும் 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வங்கி பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு அடிப்படையில், எஸ்சி/எஸ்டிக்கு 5 ஆண்டு சலுகை, ஓபிசிக்குச் 3 ஆண்டு சலுகை, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது சலுகை வழங்கப்படும்.

தேர்வு முறை:

தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்:

1. Objective Type தேர்வு – ஆங்கிலம், கணினி அறிவு, வங்கி மற்றும் பொருளாதார அறிவு உள்ளிட்ட பிரிவுகள்

2. Descriptive Type தேர்வு – கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல்

தேர்வு முடிவின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும்.

சம்பளம்: தேர்வு முடிந்த பிறகு ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு/ஓபிசி/இடபுள்யூஎஸ் பிரிவினர்: ரூ.750

எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க இணையதள முகவரி: https://sbi.co.in/hi/web/careers/current-openings

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: மே 29, 2025