
தஞ்சாவூர் மாவட்டம் குடவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் சண்முக பிரபு(29). இவர் தனது நண்பர்களான பாஸ்கர்(40), பிரகதீஸ்வரன்(40) ஆகியோருடன் கும்பகோணம் புறநகர் பகுதியில் இருக்கும் சிமெண்ட் கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 12-ஆம் தேதி 34 வயதுடைய பெண் சாலையில் தனியாக நடந்து சென்றார். அப்போது சண்முக பிரபு உள்ளிட்ட மூன்று பேரும் அந்த பெண்ணை புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் தூக்கி சென்றனர்.
இதனையடுத்து அந்த கட்டிடத்தில் வாட்ச்மேனாக வேலை பார்க்கும் சரவணன்(48), சண்முக பிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர்.
இதை வெளியே சொன்னால் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவோம் என மிரட்டி அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். மறுநாள் அந்த பெண் தனது சகோதரர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சண்முக பிரபு உள்பட்ட நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.