உத்திரபிரதேசம் மாநிலம் லக்னாவை சேர்ந்தவர் உஷா. இவரது மகள் லக்கி. நேற்று இரவு உஷா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது லக்கி தனது காதலனான ஷாஹித் என்பவருடன் இணைந்து உஷாவின் கழுத்தை நெரித்து உடலின் பல்வேறு பகுதிகளில் கண்ணாடியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை வழக்காக மாற்ற திட்டமிட்ட லக்கியும், அவரது காதலனும் உஷாவின் உடைகளை அகற்றி சுற்றுவட்டார மக்களிடம் மர்ம நபர்கள் வந்து உஷாவை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியுள்ளனர்.

ஆனால் லக்கியின் நடத்தை மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் லக்கியையும் அவரது காதலன் ஷாகிதையும் பிடித்து விசாரித்தனர். அப்போது ஷாஹித் உண்மையை ஒப்புக்கொண்டார். அதாவது ஷாகித்தை திருமணம் செய்து கொள்வதற்கு உஷா மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு லக்கி ஷாகித்துடன் ஓடி விட்டார்.

அதன் பிறகு உஷா காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் ஷாகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து லக்ககியின் காதலுக்கு உஷா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் சேர்ந்து உஷாவை கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.