
தமிழகம் முழுவதும் கடந்த 16ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யோக பாபு என்ற 17 வயது சிறுவன் 11ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 273 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால் வணிகவியல் பாடத்தில் தோல்வியடைந்ததால் மாணவன் மிகவும் மன வேதனையில் இருந்துள்ளான். இதனால் சிறுவன் நேற்று முன்தினம் மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சிறுவனின் தந்தை சூரிய நாராயணன் டாக்ஸி டிரைவராக இருக்கும் நிலையில் தாயார் புஷ்பலதா. இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் இளைய மகன் யோக பாபு என்பது குறிப்பிடத்தக்கதாகும்