அதிமுக முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் இருந்தது. நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் தீவிரமாக சோதனை நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி தற்போது அதிமுக உசிலம்பட்டி ஒன்றிய செயலாளராக உள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பா.நீதிபதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2021 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். எம்எல்ஏவாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிலுவையில் இருந்த நிலையில், நேற்று முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக 1.83 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் தனது வருமானத்தை விட 61% அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.