தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதியில் பட்டாசு குடம் செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரியாஸ்(19), சுந்தரராஜ்(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பட்டாசு குடோன் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.