
திருப்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 அளவில் வால்பாறைக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டிய நிலையில் நடத்துனராக சிவராஜ் என்பவர் இருந்தார். இந்த பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்த நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் பேருந்து வால்பாறை அருகே சென்று கொண்டிருந்தது. 33வது கொண்டை ஊசி அருகே வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது சாலையோரத்தில் இருந்த ஒரு 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்து விபத்துக்குள்ளான நிலையில் இது குறித்து போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 40-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.